சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஆசிரியப் பெருமக்களுக்கு வெள்ளி நாணயங்களை வழங்கி கௌரவித்து, சேலம் சிந்தி இந்து அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் தின விழா உற்சாகம்.
ஆசிரியராக தனது பணியை தொடங்கி பேராசிரியராக உயர்ந்து, நாளடைவில் இந்திய குடியரசுத் தலைவராக அலங்கரித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழாவை நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவாக, ஆண்டுதோறும் செப்டம்பர்-5ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் குச்சிபாளையம் நாராயண நகர் பகுதியில் உள்ள ஹிந்தி இந்து அரசு உதவி பெறும் பள்ளியில் தேசிய ஆசிரியர் தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ சிந்தி கல்வியா அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி லதா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளியின் தலைவர் ராம்சந்த் கிங்கர், தாளாளர் நரேஷ் கிங்கர் மற்றும் பொருளாளர் தீபக் கதீஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கினை ஏற்றி வைத்தும், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தும் விழாவை சிறப்பித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியப் பெருமக்களின் பணி சிறக்கவும் அவர்களது பணியை பாராட்டியும் ஒவ்வொரு ஆசிரியர் பெருமக்களுக்கும் வெள்ளி நாணயங்களை வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற முறை இந்த பள்ளியின் பவள விழா ஆண்டில் பள்ளிக்கு அதிக நன்கொடை வசூலித்துக் கொடுத்த தலைமை ஆசிரியர் திருமதி லதா, ஆசிரியர் திரு. ஜெகதீஸ்வரன் மற்றும் திருமதி மேகலை ஆகியோருக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை அடுத்து நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் காலம் சென்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் குறித்து பேசியது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. தொடர்ந்து சிறப்பாக ஆசிரியர் பெருமக்கள் குறித்து பாராட்டி பேசிய மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியப் பெருமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: