சேலம்.
S.K. சுரேஷ் பா.
பூமியை பாதுகாப்போம் - வருங்கால தலைமுறைக்காக " என்ற தலைப்பில் இருசக்கர வாகனப் விழிப்புணர்வு பேரணி..
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியின்
இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் "பூமியை பாதுகாப்போம் - வருங்கால தலைமுறைக்காக" என்ற தலைப்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக சேலம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.டி .எம்.செல்வகணபதி அவர்கள் பேரணியை துவங்கி வைத்தார்.
இந்த பேரணி சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் இருந்து தொடங்கி, கோரிமேடு, சேலம் மாவட்ட நீதிமன்றம், அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி சாலை, 5 சாலை, AVR ரவுண்டானா, கொண்டலம்பட்டி ரவுண்டானா, சீலநாய்க்கன்பட்டி ரவுண்டானா, அம்மாப்பேட்டை, மிலிட்டரி ரோடு, TMS ஷெட், மேம்பாலம், 7 ஆர்ட்ஸ் கலைக் கல்லூரி ஆகிய முக்கிய இடங்களை கடந்து மீண்டும் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நிறைவுற்றது. இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேம்படுத்தி, நிலைத்தன்மை வாய்ந்த மாற்றுகளைப் பயன்படுத்தும்படி ஊக்குவிக்கும் என்பதற்காக இந்த பேரணி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் திரு.செல்வகணபதி அவர்கள் பேசும்போது இயற்கையை பாதுகாக்கவும், இயற்கை முறையில் விவசாயம் செய்யவும் அரசாங்கம் தனி கவனம் செலுத்தி வருகின்றது என்றும், இயற்கையை அளித்து வருவதால் மனிதர்கள் அதிகமாக நோய் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் இயற்கை விவசாயம் செய்யாமல் அதில் உரம், பூச்சிகொல்லி மருந்து போன்றவைகளை பயன்படுத்தி பயிர்கள் விளைவிப்பதால் அதனை உண்டு மக்கள் புற்று நோய் மற்றும் குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் அதிகமாகி வருகின்றனர். அதே போல மக்கள் தற்போது துரித உணவு மற்றும் பாக்கெட்டில் அடைத்த உணவுகளை அதிகம் உண்பதாலும் புற்று நோய்கள் அதிகமாகி வருகின்றன. தற்போது குளத்தில் உள்ள நீரில் கூட மாசு கலந்துள்ளது என்றும் அதனால் வண்டல் மண் பாதிப்படைந்து வருகின்றது என்றும் இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறினார். தொழிற்சாலைகள் மூலமாக வெளிவரும் கழிவுகளின் மூலம் சுற்றுசூழல் பாதிப்படைகின்றது என்றும் மரங்களை வெட்டுவதால் இயற்கை அதிகம் பாதிக்கப்படுகின்றது என்றும் ஆதலால் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது, இந்நிலையை மாற்ற அவசியம் மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றும் அந்த விழிப்புணர்வு இந்த இருசக்கர வாகன பேரணியின் மூலம் வாய்ப்பாக கிடைக்கும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வு, பிளாஸ்டிக்குகளை தவிர்ப்பது, துணிப் பைகளை பயன்படுத்துவது, மறுசுழற்சி கொள்கைகளை பின்பற்றுவது மற்றும் விநாயகர் பூஜைக்காக பிளாஸ்டர் ஆப் பாரிஸால் ஆன விநாயகர் சிலைகளுக்கு மாறாக களிமண்ணால் ஆன சிலைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்துகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி நடைபெற்றது. இதில் மாணவர்கள் தமிழக அரசு துவக்கி வைத்த “என் குப்பை என் பொறுப்பு” என்ற வாசகம் அடங்கிய பேனருடன் மக்களுக்கு சுற்றுபுறத்தூய்மையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
0 coment rios: