தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நேற்று (10ம் தேதி) உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் நாளை (12ம் தேதி) அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் தாலுகா பிச்சிவிளை கிராமத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் இன்று (11ம் தேதி) நடைபெற்றது.
மாவட்டத் துணைத் தலைவர் வேலா பி.எஸ்.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பொ.இராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் பி.செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் ஐயங்கார் ஏ.ஆனந்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் நெல்லை ஏ.ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சி.ஞானசேகர், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பி.ரியாஷ் அகமது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் தமிழரசன், மாநகரத் தலைவர் அந்தோணி யூஜின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநகர செயலாளர் பாலமுருகன், மாநகர பொருளாளர் சாதிக் பாஷா, ஈரோடு கனி மார்க்கெட் அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் நூர் முகமது, மூலப்பட்டறை அனைத்து வணிகர்கள், கருங்கல்பாளையம் அனைத்து வணிகர்கள், காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள், பவானி நகர அனைத்து வணிகர்கள், பி.பெ.அக்ரஹாரம் அனைத்து வியாபாரிகள், மாவட்ட சங்க அலுவலர் கௌதமன் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும், மறைந்த தலைவருடன் ஏற்பட்ட தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.
0 coment rios: