புதன், 11 செப்டம்பர், 2024

ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் பணிக்கு செப்.14ல் நேர்காணல்

ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் கவின் கூறியதாவது:-  

ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 14ம் தேதி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டி.பி ஹாலில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

ஓட்டுநருர் பணிக்கான அடிப்படை தகுதிகளான, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். ஆண் பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேஜ் வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும். இப்பணிக்கு, மாத ஊதியம் ரூ.15,820 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் வழங்கப்படும்.

மருத்துவ உதவியாளர் பணிக்கு அடிப்படைத் தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங். அல்லது ஜி என் எம், ஏ என் எம், டி எம் எல் டி (12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு தேர்வு அன்று 19-க்கு குறையாமலும் 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.16,020 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியில், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான, மற்றும் மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். முகாமில் தேர்வு செய்யப்படுபவர்கள் 45 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும், விவரங்கள் அறிய 044-28888060,75,77 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: