அந்த வகையில், இன்று (11ம் தேதி) ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் சுற்றுப்புறத்தையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, பள்ளியில் செயல்படும் சத்துணவு கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சத்துணவு பணியாளர்கள் தெரிவித்த இடப்பற்றாக்குறை தொடர்பான கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதி உதவியுடன் வாங்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான தொடுதிரை பலகை மற்றும் திறன்மிகு வகுப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு குறித்து கேட்டறிந்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
0 coment rios: