S.K. சுரேஷ்பாபு.
அருந்ததியர் உள்ளோதிக்கீடுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்.....
அருந்ததியர் 3% உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் இட ஒதுக்கீட்டு உரிமையில் மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கின்ற வகையிலும் உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி தீர்ப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுசேராய்வு மனு தாக்கல் செய்திருப்பதை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.டி.ஆர் சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அருந்ததியர் இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி தீர்ப்ப நீ ரத்து செய்ய வலியுறுத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், மறுசீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் அருந்ததியர் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் பிரதாபன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர. இந்த போராட்டம் குறித்து அருந்ததியர் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பிரதாபன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் முதற்கட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்தபடியாக மாநில அளவில் அருந்ததியர் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
0 coment rios: