இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீலாதுன் நபி சமூக நல்லிணக்க விழா மற்றும் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா ஈரோடு எம் ஐ எஸ் அரங்கத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அஸ்கர் அலி தலைமையில், மாவட்ட செயலாளர் எம்.முஹம்மது ஆரிப் வரவேற்றார், சமுதாயத் தலைவர்கள், கண்ணியமிகு முத்தவல்லிகள், சங்கைமிகு உலமாபெருமக்கள், பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள், முஸ்லிம் லீக் முன்னோடிகள், ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்,,ஈரோடு மாவட்ட அரசு காஜி மீ.முஹம்மது கிஃபாயத்துல்லா பாக்கவி, ஈரோடு மாவட்ட ஜமாத்துல் உலமாசபை செயலாளர் கே.பைஜூர் ரஹ்மான் பாக்கவி மிலாதுன் நபி குறித்து உரையாற்றினர், கோவை ஒதிமலைதவத்திரு சிவநேச அடிகளார் சமூக நல்லிணக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், சிராஜுல் மில்லத் ஆ.க.அ.அப்துல் சமது சமூக நல்லிணக்க விருது வழங்கி விழா பேருரையாற்றினார், இதனைத் தொடர்ந்து தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார், பாராளுமன்றத்தில் இரு சபையில் சேர்த்து 5 உறுப்பிணர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் உள்ளோம் அதனை 25 உறுப்பினராக உயர்த்த எடுப்போம்,தேசிய பொதுக்குழுவில் வரும் நான்கு ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க உள்ளனர், தமிழகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட கழகம், பேராயர்கள், குன்றக்குடி அடிகளார் ஆகியோருடன் நபிகள் நாயகம் பிறந்தநாளை சமூக நல்லிணக்க நாளாக கொண்டாடினர், பாஜக ஆட்சியில் எந்த அடிப்படையில் இந்த புதிய சட்டம் கொண்டு வரப் போகிறது என்பதை தெளிவுபடுத்தவில்லை. ஒவ்வொரு மதத்திற்கும் அதன் சொந்த சட்டங்கள் உள்ளன. அனைத்து மதங்களுக்கும் பொதுவான சட்டம் எப்படி கொண்டு வர முடியும்? டாக்டர் அம்பேத்கர், அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம் அச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதை கட்டாயப்படுத்தவில்லை. அவர்கள் அதை பரிந்துரைத்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் நவம்பரில் அச்சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது. அதில் கூட மலைவாழ் பழங்குடியினர் மற்றும் நகரவாசிகள் இடையே வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. கோவாவில் சுதந்திரத்திற்கு முன் ஒரு சட்டம் இருந்தது. ஆனால் இந்துக்களுக்கு அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. எனவே பொது சிவில் சட்டம் கொண்டு வர முடியாது.அதை கொண்டு வர தேவையில்லை. காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்குவதை நாங்கள் எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை. பாஜகவின் கொள்கைப்படி ஒரு முஸ்லிமுக்கு கூட எம்பி, எம்எல்ஏ சீட் வழங்கப்படுவதில்லை. அப்படி இருக்கும்போது மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு எப்படி இடம் கிடைக்கும்? இந்தியாவில் பல்வேறு கலாச்சாரம், மதம், மொழி மற்றும் இனம் உள்ளது. ஆனால் ஒரே கலாச்சாரம், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி போன்றவற்றை முன்வைத்து அதை மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது.இது மிகவும் ஆபத்தானது. இதை நாங்கள் எதிர்க்கிறோம். கலைஞர் முஸ்லீம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கியபோது தமிழ்நாட்டில் 45 லட்சம் முஸ்லிம்கள் இருந்தனர். அது அதிகரித்திருக்கும். 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். பீகாரில் நடந்தது போல் மாநில அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால், பீகாரில் நடந்தது போல் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும். புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, முஸ்லிம்களுக்கு ஐந்து அல்லது ஏழு அல்லது பத்து சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குமாறு மாநில அரசிடம் கேட்போம் மறைந்த முதல்வர் அண்ணா காலத்தில் இருந்து மாநில அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே முஸ்லிம்கள் வகித்து வந்த இரண்டு அமைச்சுப் பதவிகள் தற்போது ஒரு அமைச்சராகக் குறைக்கப்படுவது பிரச்சினை இல்லை. தற்போது முதல்வர் தேவைக்கு ஏற்ப அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டார். பழைய தலைவர் ராஜினாமா செய்தார். அதன் பின்னால் வேறு எந்த காரணமும் இல்லை. வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களை எதிர்க்கிறோம். இதற்கு எதிராக ஏற்கனவே 1.50 கோடி பேர் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு பல மாநிலங்களுக்குச் சென்று மக்களின் கருத்தைப் பெற்று வருகிறது. திங்கள்கிழமை தமிழகம் வந்தடைகிறது. நாங்கள் எங்கள் கருத்தை தெரிவிப்போம். இதன் பின்னர், திருத்தப்பட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் பரிசீலித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது எமது கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் இதை 25 ஆக உயர்த்த வியூகம் அமைக்கப்படும். டிசம்பரில் கட்சியின் தலைமையகம் டெல்லியில் திறக்கப்படும். அப்போது நடைபெறும் தேசிய செயற்குழுவில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்கான செயல்திட்டம் அறிவிக்கப்படும் என்றார், விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில, மாவட்ட, நகரப் பகுதி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர், விழா முடிவில் மாவட்ட பொருளாளர் ஈ.கே.எம்.முஹம்மது கலில் நன்றியுரையாற்றினார்.
வக்பு வாரிய திருத்த சட்டம் முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்ள கூடாத சட்டம் என கூற முடியாது என்று தலைப்பிடப்பட்டுள்ளது ஆனால் பேட்டியின் உள்ளே அது போன்று அவர் கூறியதாக வரவில்லை.
பதிலளிநீக்கு