இது பற்றி வார்டனிடம் புகார் அளித்தால் புகார் அளிப்பவரை மிரட்டல் தொனியில் பேசி நடவடிக்கை எடுக்காமல் இருந்து உள்ளார். இது பற்றி மனித நேய ஜனநாயக கட்சியின் மனித உரிமை அணியின் மாநில செயலாளர் திருப்பூர் கண்ணன் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தந்து உதவி கோரினர்.
இதுகுறித்து ஈரோடு மேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, இன்று (30ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, சந்தித்து புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக இது குறித்து சமந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விசாரனை மேற்கொள்ள உத்தரவிடுவதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் கவுந்தி சாகுல் அமீது, மாநகர் மாவட்ட அவைத் தலைவர் முஹம்மது ஹாரிஸ் , கவுந்தப்பாடி கிளை அவைத் தலைவர் அப்துல் அஜீஸ், கிளை செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: