திங்கள், 16 செப்டம்பர், 2024

குழந்தையின் சுவாசக்குழாயில் சிக்கிய முந்திரியை அகற்றி ஈரோடு சுதா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள கிராமப்பகுதியை சேர்ந்த இளம் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 1 வயது நிறைவுபெற்று 3 மாதங்கள் ஆகிறது. 2 நாட்க ளுக்கு முன்பு குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக பெற்றோர் குழந்தையை அவர்கள் வழக்கமாக பார்க்கும் டாக்டரிடம் கொண்டு சென்றனர். அங்கு முழுமையாக பரிசோதனை செய்தபோது குழந்தைக்கு மூச்சுத்திணறல் தொடர்ச்சியாக இருந்தது.

அதைத்தொடர்ந்து குழந்தைக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சுவாசக் குழாயின் இடது பக்க குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. 

மேல் சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சுதா பல் துறை மருத்துவமனைக்கு குழந்தை கொண்டுவரப்பட்டது.

உயிருக்கு போராடிய நிலையில் குழந்தை இருப்பதை அறிந்த சுதா மருத்துவமனை காது மூக்கு தொண்டை துறை குரல்வளை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.பி.கவின்குமார் விரைந்து வந்து குழந்தையை பரிசோதனை செய்தார். 

அவருடன் தலை-கழுத்து சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபக் விசாகன், குழந்தைகள் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் டாக்டர் கவுரி சங்கர், டாக்டர் ரங்கேஷ் மற்றும் மருத்துவக்குழுவினர் குழந்தையை அவசர சிகிச்சை பிரி வுக்கு கொண்டு சென்றனர்.

சுவாசக்குழாய் அடைப்பு காரணமாக நுரையீரலின் ஒரு பகுதி வீக்கம் அடைய தொடங்கி இருந் தது. எனவே சிகிச்சையை உடனடியாக தொடங்கிய டாக்டர்கள் குழுவினர் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சுவாசக்குழாயில் அடைத்திருந்த பொருளை வெளியே எடுத்தனர். 

அது 15 செ.மீட்டர் நீளமுள்ள உடைந்த முந்திரி பருப்பாகும். அதை வெளியே எடுத்த பிறகே குழந்தை இயல்புநிலைக்கு திரும்பியது. சிகிச்சையின்போது மயக்க மருந்து நிபுணர் டாக்டர் பாலாஜி உடன் இருந்தார்.

இதுகுறித்து குரல்வளை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.பி.கவின்குமார் கூறும்போது, 'குழந்தை முந்திரி பருப்பை விழுங்கியதை பெற்றோர் கவனிக்கவில்லை. ஆனால் அதிர்ஷ்டவச மாக உடனடியாக டாக்டரிடம் அழைத்துச்சென்றனர். எனவேதான் சுவாசக்குழாய் அடைப்பு கண்டறியப்பட்டது. 

பொதுவாக, 9 மாதம் முதல் 5 வயது வரையான குழந்தைகள் எந்த ஒரு பொருளை எடுத்தாலும் உடனடியாக வாயில் போட்டுவிடும். எனவே குழந்தைகளை கண்கா ணிக்க வேண்டும். குழந்தைகள் நடமாடும் இடத்தில் ஆபத்தான பொருட்களை வைக்கக்கூடாது. அவை மிகுந்த ஆபத்தானது' என்றார்.

மருத்துவக்குழுவினருக்கு சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கே.சுதாகர் பாராட்டு தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: