பெரியார் பிறந்தநாள் விழா இன்று(17ம் தேதி) அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோட்டில் தந்தை பெரியார் -அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர். மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கலைமாமணி, ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன்
பலர் கலந்து கொண்டனர்.
பெரியாரின் பிறந்தநாளையொட்டி பெரியாரின் பொன்மொழிகள், உரைகள் ஒலிபரப்பப்பட்டது. மேலும் பெரியாரின் இல்லம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது.
0 coment rios: