சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வீட்டின் அருகே நடைபெறும் வார்டு கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
சேலம் மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சேலம் மாநகராட்சி 15 வது வார்டு கூட்டம் இன்று நடைபெற்றது. பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் இல்லத்திற்கு அருகாமையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று கூட்டத்திற்கு சென்று கண்டனம் தெரிவித்தார். அப்போது மாநகராட்சி ஊழியர்களை தன்னை ஏன் அழைக்கவில்லை மக்கள் பிரச்சனையை பேச நான் வரக்கூடாதா என்று கண்டித்தார்
இதனிடையே கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் திமுகவை சேர்ந்த உமாராணி அருள் கேள்வி எழுப்பியதற்கு மறுப்பு தெரிவித்து பேச தொடங்கினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப் போகவே அருள் தரையில அமர்ந்து போராட்டம் நடத்தினார். மக்கள் பிரச்சனையை தீர்க்க அனைவரையும் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம் ஆனால் முதலமைச்சரை அவமதிக்கும் நோக்கத்தோடு திமுகவினர் செயல்படுவதாக அருள் குற்றம் சாட்டவே இது என்னடா வம்பாப்வே போய்விட்டது என்று சுதாரித்துக் கொண்ட உமாராணி தானும் அருளுடன் தரையில் அமர்ந்து குரல் எழுப்பினார்
இதானால் கூட்டத்தில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0 coment rios: