சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் காந்தி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் A.R.B. பாஸ்கர் கிளம்பிட்டாகினார். கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் தேசிய தலைவர்களில் ஒருவரான K.V. தங்கபாலு ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலும் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, துணைத் தலைவர்கள் திருமுருகன் மற்றும் மொட்டையாண்டி, பொதுக்குழு உறுப்பினர் பச்சப்பட்டி பழனிச்சாமி, வர்த்தக பிரிவு தலைவர் M.D.சுப்பிரமணி உள்ளிட்ட ஒரு முன்னிலை வகித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி பிறந்த நாள் விழாவை தொடர்ந்து எட்டு தினங்களுக்கு சேலம் மாநகர் மாவட்ட பகுதிகளில் எவ்வாறெல்லாம் சிறப்பாக கொண்டாடுவது என்றும் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. மேலும் காந்தி பிறந்தநாள் விழாவின் போது நடை பயணத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் குமரேசன், சாந்தமூர்த்தி, நிசார், 42 வது டிவிஷன் தலைவர் சிவாஜி உட்பட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: