சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அகில பாரதிய வித்யாத்ரி பரிசத் ABVP சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் யுவராஜ் மற்றும் மாநில இணைச் செயலாளர் எழில் வேந்தன் ஆகியோர் கலந்துக்கொண்ட செய்தியாளர் சந்திப்பு சேலத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், சேலத்தில் நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 75 ஆண்டுகளாக கல்வித்துறையில் தேசிய மறுமலர்ச்சி கொள்கைகளை முன்னிறுத்தி அகில பாரத அளவில் இயங்கி வரும் தேசிய மாணவர் அமைப்பு. தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களில் ABVP கிளைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் ABVPயின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும், இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ தலைவர்கள் பல்வேறு வளாகங்களின் பிரதிநிதிகளாக கலந்துகொண்டு தமிழகத்தில் நிலவிவரும் கல்வித்துறை மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மாநில அளவில் ABVPயின் கூட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக மாநில செயற்குழுகூட்டம் கருதப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மாநில செயற்குழு கூட்டம் - 2024 வருகின்ற செப்டம்பர் 28 & 29 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர் மரவனேரி பகுதியில் அமைந்துள்ள மாதவம் மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ தலைவர்கள் தமிழகத்தின் கிட்டத்தட்ட 100 கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டு தமிழகத்தில் நிலவிவரும் கல்வித்துறை, போதைப்பொருள் புழக்கம் மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்து மூன்று விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மாநிலச் செயற்குழு கூட்டத்தில் ABVPயின் தேசிய இணை அமைப்புச் செயலாளர் திரு. S. பாலகிருஷ்ணா அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். இரண்டு நாள் நடக்கவுள்ள இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதுடன் அமைப்புரீதியாக அடுத்து வரவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.
0 coment rios: