சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் கட்டுமான பொருட்கள் கண்காட்சியை
மேயர் ராமச்சந்திரன், டி. எம் .செல்வகணபதி எம் .பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அழகழகான கட்டிடங்களும், கண்ணை கவரும் வீடுகளும் மாநகரை அழகு படுத்துகின்றன. அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையாக வீடுகள், கட்டிடங்கள் உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் கனவு இல்லத்தை தங்களது ரசனைக்கேற்ப வடிவமைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தங்களது கனவு இல்லத்தை தாங்கள் நினைத்தபடி பிரமாண்டமாக கட்ட அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் தேர்வு செய்யும் வகையில் சேலத்தில் கிறிஸ்டல் கட்டுமான பொருட்கள் கண்காட்சி சேலம் ஐந்து ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது . இன்று 20ந் தேதி முதல் வருகிற 2 2 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கிரிஸ்டல் நிறுவனத்தைச் சார்ந்த திருமதி அர்ச்சனா தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில்
சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், சேலம் பாராளுமன்ற தொகுதி எம்பியும், மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம். .செல்வகணபதி, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் குத்து விளக்கு ஏற்றியும் ரிப்பன் வெட்டியும் தொடங்கி வைத்தனர்.
இந்த பொருட்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான பொருட்கள் உள்ள அரங்குகள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் கண்ணை கவரும் வகையில் பார்த்தவுடன் வாங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன .இதில் குறிப்பாக செந்தூர் பிளைவுட், டைகர் சோலார் பவர் சிஸ்டம், விதவிதமான வீட்டை அழகுப்படுத்தும் கண்ணாடிகள், அனைத்து ரகங்களில் டைல்ஸ்கள், கேரள உட் அண்ட் பர்னிச்சர்கள், குடிநீர் குழாய்கள், இரும்பு பைப்புகள் , பல்வேறு வகையான குடிநீர் நல்லிகள் , சிசிடிவி மற்றும் சூழலும் கேமராக்கள், சிமெண்ட் கல்கள், ஹலோ பிளாக்குகள், ஹோம் தியேட்டர், பெயிண்ட் ரகங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் ,தகர கூரைகள், ஏசி, மின்விசிறிகள் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் , தானியங்கும் சுவிட்ச்சிகள்,ஹார்டுவேர்ஸ் பொருட்கள், வாட்டர் பில்டர் ,சோபா ,கட்டில் ,கல் சிலைகள், லாக்கர்கள், பூட்டுகள் , நிலம் வாங்குவதற்கான ரியல் எஸ்டேட் அரங்குகள், இரும்பு கம்பிகள் , டைனிங் டேபிள்கள் ஊஞ்சல்கள் உட்பட வீடு கட்டவும் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த அரங்குகளில் இடம்பெற்றுள்ளன .
குறைந்த விலையில் தரமாக வீடு கட்ட மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு வாங்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளும் ,கடன் வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கிறிஸ்டல் கட்டுமான பொருட்கள் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் அப்சனா மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
இந்த திறப்பு விழாவில் நாமக்கல் மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் நிர்வாகிகள் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அன்சர் பாஷா ,தருமபுரி மாவட்ட செயலாளர் சிராஜுதீன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
0 coment rios: