S.K. சுரேஷ் பாபு.
உலக இதய தினத்தை ஒட்டி சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் மாரத்தான் போட்டி. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியினை Cop மற்றும் Sp உள்ளிட்ட துவக்கி வைத்தனர்.
உலக இருதய தினத்தை முன்னிட்டு சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் 4வது ஆண்டாக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. 21.1 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தை சேலம் கார்ப்பரேஷன் அசிஸ்டன்ட் கமிஷனர் அஸ்வினிஅவர்கள் துவக்கி வைத்தார்.
காலை 5.30 மணிக்கு தொடங்கிய 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை SP கௌதம் கோயல் தொடங்கி வைத்தார்.
காலை 7 மணிக்கு தொடங்கிய 5 கிலோ மீட்டர் ஓட்டத்தை சேலம் மாவட்ட கமிஷனர் பிரவீன் குமார் துவங்கி வைத்தார். 21.1 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக கன்னங்குறிச்சி சாலை சென்று திரும்ப அஸ்தம்பட்டி வழியாக சாரதா காலேஜ் ரோடு 4ரோடு வழியில் காந்தி மைதானத்தை வந்தடைந்தது. இதேபோல் 10 கிலோமீட்டர் ஓட்டமானது சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி ஏற்காடு கோரிமேடு அடிவாரம் வரை சென்று திரும்ப அஸ்தம்பட்டி வழியாக சாரதா காலேஜ் ரோடு 4ரோடு வழியில் காந்தி மைதானத்தை வந்தடைந்தது. இதேபோல் 5 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயம் சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக சென்று திரும்பவும் சாரதா காலேஜ் - 4ரோடு வந்து திரும்ப காந்தி மைதானத்தை அடைந்தது. காவேரி மருத்துவமனை மாரத்தான் ஓட்டத்திற்கு சேலம் மருத்துவமனை இயக்குனர் செல்வம், மருத்துவர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இருதய மருத்துவர்கள் மருத்துவ சுந்தர பாண்டியன், மருத்துவர் சதீஷ்குமார் , மருத்துவர் ராஜேந்திரன் ஆகியோர் இருதய விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்தனர். 21.1 கிலோமீட்டர் பத்து கிலோமீட்டர் ஐந்து கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளை வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை சேலம் கார்ப்பரேஷன் கமிஷனர் ரஞ்சித் சிங் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி சிவரஞ்சன் ஆகியோர் அளித்தனர். சேலம் காவேரி மருத்துவமனையின் நிர்வாகத்தினர் ஊழியர்கள் உள்ளடங்கிய குழுவினர் சார்பில் மாரத்தான் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.
0 coment rios: