ஈரோட்டில் அக்.,25ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இம்மாதம் அக்டோபர் 25ம் தேதி (நாளை மறுநாள்) வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.
மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
0 coment rios: