ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் அருகே வரக்குட்டைபுதூரைச் சேர்ந்தவர் ஹரிசந்திரன் (வயது 36). இவர் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான சைசிங் மில்லில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 ரோடு பகுதியில் உள்ள இடத்தில் சைசிங் மில்லில் பயன்படுத்தப்படும் சுமார் 1,000 பீம்கள் (இரும்பு உருளை) அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அங்கு நேற்று காலை ஹரிசந்திரன் சென்று பார்வையிட்டார். அப்போது 30 பீம்கள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஹரிசந்திரன் கொடுத்த புகாரின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு பெரியசேமூர் கொத்துகாரர்தோட்டம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் நந்தீஸ்வரன் (வயது 24) என்பவர் நேற்று முன்தினம் இரவில் சரக்கு வாகனத்தை வாட கைக்கு எடுத்து வந்து 30 பீம்களை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நந்தீஸ்வரனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 30 பீம்களை மீட்டனர்.
0 coment rios: