சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
செங்குந்த மகாஜன மாணவ மாணவிகள் 440 பேருக்கு சுமார் 9 லட்சம் ரூபாய் அளவில் கல்வி ஊக்கத்தொகை.
தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சேலம் மாவட்டத்தின் சார்பாக செங்குந்த மகாஜனத்தை சேர்ந்த கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை மற்றும் ஊக்க பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 35 ஆவது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் சடையப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட நிர்வாகிகள் ராஜகோபால் நக்கீரன் மற்றும் லோகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் செல்வராஜ் மற்றும், சேலம் ஸ்ரீ சண்முகா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பன்னீர்செல்வம், தியாகச் செம்மல் தாரை குமரவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கடந்தாண்டு மற்றும் நடப்பு ஆண்டுகளில் கல்வியில் சிறந்து விளங்கும் செங்குந்த மகாஜனத்தை சார்ந்து மாணவ மாணவிகள் 440 பேருக்கு சுமார் 9 லட்சம் ரூபாய் அளவிற்கு கல்வி ஊக்க தொகையும் உதவித்தொகையும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: