சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
புரட்டாசி மாத நிறைவையொட்டி சேலம் பெரிய புதூர் ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் எம்பெருமானின் கருட சேவை திருவீதி உலா.
தமிழ் மாதங்களில் வரும் புரட்டாசி மாதம் திருவேங்கடமுடியானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் நான்கு சனி வாரங்களிலும் ஒவ்வொரு வைணவ ஆலயங்களிலும் உள்ள எம்பெருமான் வேங்கடமுடியானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாதிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் சேலம் பெரிய புதூர் ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் புரட்டாசி மாதத்தை ஒட்டி கடந்த நான்கு வாரமும் சனிக்கிழமைகளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதை அடுத்து இறுதி நிகழ்ச்சியாக கருட சேவையில் எம்பெருமான் திருவீதி உலா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று அதிகாலை முதலே மூலவருக்கு பல்வேறு மலர்களாலும் பல்வேறு மங்களப் பொருட்களாலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுவாமியின் உற்சவமூர்த்திக்கு மகா தீபாராதனை நடைபெற்றன. இதனை அடுத்து கருட வாகனத்தில் படியமர்த்தப்பட்ட ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதீர்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பட்டாசியார்கள் சுவாமிக்கு மேளதாளங்கள் முழங்க தேங்காய் ஆராதனை காட்டி அதனை உடைத்த பிறகு கருட சேவை திருவீதி உலா தொடங்கியது. பெரிய புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற திருவீதி உலாவானது சேலம் சாரதா கல்லூரி வரை அருகே சென்று மீண்டும் அதே வழியாக திருக்கோவிலை அடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் திருவீதி உலாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோவிலின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதனை எடுத்து வரும் இருபதாம் தேதி ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: