அதன்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் சாந்தி, ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் மாதவன் ஆகியோரின் அறிவுரைப்படி ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் காந்தி ஜெயந்தியையொட்டி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா? என்று பல்வேறு கடைகள், நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது கடைகள், நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா? பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படுகிறதா? அல்லது 3 நாட்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்பு வழங்கப்படுகிறதா? அதற்கான படிவம் சமர்ப்பித்துள்ளனரா? என்று ஆய்வு செய்யப்பட்டது.
அதில், 45 கடைகள், 56 உணவு நிறுவனங்கள், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 106 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 30 கடைகளிலும், 49 உணவு நிறுவனங்களிலும், 3 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் என மொத்தம் 82 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காததும், விதிமுறைகளை கடைபிடிக்காததும் கண்டறியப்பட்டது.
இந்த நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 coment rios: