சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் வீரபாண்டி முன்னாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலம் சென்ற ஆ. ராஜா நினைவு தினத்தை ஒட்டி மாபெரும் ரத்ததான முகாம். ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது குருவிகளை தானமாக வழங்கினர்.
வீரபாண்டி முன்னாள் எம்.எல்.ஏவும்,
முன்னாள் தி.மு.க தேர்தல் பணிக்குழுசெயலாளருமான வீரபாண்டி ஆ.ராஜா நினைவு நாளையொட்டி சேலம்
குகையில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை வீரபாண்டி ஒன்றியக்குழு
உறுப்பினரும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான வீரபாண்டி மலர்விழிராஜா தொடங்கி வைத்தார். முன்னதாக மறைந்த வீரபாண்டி ஆ ராஜா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்விழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த குருதிக்கொடி முகாம் குறித்து, வீரபாண்டி ஒன்றிய குழு உறுப்பினரும் காலம் சென்ற வீரபாண்டி ஆ. ராஜா அவர்களின் குமாரத்தியுமான மலர்விழி செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த 21 ஆண்டுகளாக இந்த குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் நாளை தனது தந்தையும் முன்னாள் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினரும் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆக விளங்கிய வீரபாண்டி ஆ. ராஜா அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் முதற்கண் மரியாதை செலுத்த உள்ளதாகவும் அதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் உட்பட நண்பகல் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 coment rios: