சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் நேற்று பெய்த கன மழையில் மழை நீரில் மூழ்கியது கந்தம்பட்டி பகுதி. மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா அருள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
சேலத்தில் கடந்த சில நாட்களாகவே காலையில் வெயில் பாட்டி வதைப்பதும் இரவு நேரங்களில் கன மழை பெய்வதும் வாடிக்கையாகவே உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று காலை வெப்பம் வாட்டி விதைத்த நிலையில் நேற்று இரவு திடீரென சுமார் 10 மணி அளவிற்கு கைய தொடங்கிய மழை கன மழையாக மாறியது. இதனை அடுத்து தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொது மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள ஏரி உடைந்து ஏரி நீர் ஊருக்குள் புகுந்தது.
இதன் காரணமாக நேற்று பெய்த கனமழை காரணத்தினாலும், ஏரி நீர் ஊருக்குள் புகுந்ததாலும், சிவதாபுரம் கந்தம்பட்டியில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் உள்ள ரயில்வே பாலத்தில் மழை நீர் முழுவதும் நிரம்பி விட்டது. நேரில் சென்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் வரவழைத்து ராட்சத மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியே எடுக்கும் நடவடிக்கை ஈடுபட்டார். முல்லை நகர் திருவா கவுண்டனூர் காமராஜர் காலனி புது ரோடு சேலதாம்பட்டி அழகாபுரம் பகுதியில் மழை நீர் புகுந்தது சேலம் மேற்கு தொகுதி இரா. அருள் எம் எல் ஏ பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் கூறி உடனடியாக மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டார். தொடங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட பதிவு பொதுமக்கள் சில மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றது.
0 coment rios: