சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வேட்டையின் திரைப்படம் திரையிடப்பட்ட சேலம் கௌரி திரையரங்கில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம். பால் அபிஷேகம் செய்தும், பட்டாசு கடை வெடிக்கும், கேக் மற்றும் கிடா வெட்டியும் உற்சாகம்.
தமிழகத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சேலம் ஐந்து வருட பகுதியில் உள்ள கௌரி திரையரங்கில் வேட்டையன் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. முன்னதாக இன்று காலை 5:00 மணி முதல் திரையரங்கம் முன்பு குவிந்த ரசிகர்கள் 7:00 மணி முதல் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கே கனகராஜ் தலைமையில் திரண்ட ரசிகர்கள், முதற்கட்டமாக திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பிளக்ஸ் பேனருக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, பேப்பர் வெடிகள் வெடித்தும் உற்சாகமாக நடனமிட்டும் மகிழ்ந்த ரசிகர்கள் வேட்டையின் திரைப்படம் வெற்றி பெறும் விதமாக கேக் வெட்டியும் கிடாவை வெற்றியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வேட்டையின் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் குறித்து பாரப்பட்டி கே. கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தலைவரின் திரைப்படம் தீபாவளிக்கு முன்னதாகவே திரையிடப்பட்டு தங்களது தற்பொழுது தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், உலகம் முழுவதும் இருந்து வரும் செய்திகள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று வருவது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவதாகவும் உலகம் முழுவதும் வேட்டையின் வேட்டையாடி வருவதாக தெரிவித்த கனகராஜ் இன்று திரையிடப்பட்ட திரைப்படத்தின் முதல் காட்சிகளில் 500 ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது என்றும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வெற்றி கொண்டாட்டத்தில், எஸ் கே கணேசன், சுக்கம்பட்டி பிரபு ஷங்கர் உட்பட ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: