தென்னக ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினரும், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவருமான கே.என்.பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் ரயில்வே துறையில் அஸ்வினி வைஷ்ணவ் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே நீடிக்கிறது. உலக அளவில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தும் ரயில் விபத்துகளை தடுக்கும் தொழில்நுட்பங்களை பல நாடுகள்நடைமுறைக்கு கொண்டு வந்தும், இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மட்டும்
கடந்த 10 ஆண்டுகளாக பின்ளோக்கியதாக இருப்பதற்கு நிர்வாக
திறன்யின்மையே காரணம் அதன் வெளிபாடு தான் இந்த விபத்தும் என்னவோ.
சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தையொட்டிய பகுதியில் மைசூரு தர்பாங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகளுடன் பாக்மதி எஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. தமிழகத்தின் பெரம்பூரில் இருந்து 744 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது.
அப்போது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக பாக்மதி எஸ்பிரஸ் வந்து மோதியதில் விபத்து
ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் மீது வேகமாக மோதியதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. அப்போது பாக்மதி எஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் திடீரென எரிந்தன. பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில், அதில் இருந்த பயணிகளின் உடமைகள் சிதறின. இரவு நேரம் என்பதால் பயணிகளை சிலர் இரவு உணவு முடித்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் விபத்து காரணமாக அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் சில பயணிகள் ரயிலில் இருந்து திடீரென வெளிய குதித்து தப்ப முயன்றனர் தொடர்ந்து காயம் அடைந்த
பயணிகள் அலறிய நிலையில் அருகில் வசித்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்து விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டனர். மத்திய
அரசின் ரயில் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதற்கு இந்த ரயில் விபத்து மற்றுமொரு உதாரணம்.
ஒரு மாதத்துக்கு முன்பு சீல்டா அகர்தலா கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதி 11 பேர் உயிரிழந்தனர் அப்போது எதிர்க்கட்சியினர் கண்டனங்களை முன்வைத்தபோது கூட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறு சிறு தவறுகளை அரசியலாக்க வேண்டாம் என்றார். தற்போது என்ன சொல்வாரோ??? மேலும், பல விபத்துகளில் தானியங்கி சமிக்ஞையின் தோல்வி, செயல்பாடுகளை நிர்வகிப்பதில் பல நிலைகளில் குறைபாடுகள், லோகோ பைலட் மற்றும் ரயில் மேலாளருடன் வாக்கி-டாக்கி போன்ற முக்கியமான பாதுகாப்பு உபகரணங்கள் கோளாறு என பல ஆய்வு அறிக்கை மோதலுக்கு காரணங்களாக சொல்லப்பட்டாலும் நிர்வாக திறன்யின்மையே காரணம்.
ஆகவே, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் சுய-விளம்பரத்திற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவிடாமல், இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுள்ள பாரிய குறைபாடுகளுக்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டும். எங்கள் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறையின் ஒரே கோரிக்கை என்னவென்றால் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும் விபத்துகளைத் தடுப்பதற்கும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் கவாச் எதிர்ப்பு மோதல் அமைப்பு விரைவாக நிறுவப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
0 coment rios: