S.K. சுரேஷ்பாபு.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி மாலை அணிவித்து மரியாதை.
நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தியின் திருவருவ சிலைக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் உலக நம்பி மற்றும் சேலம் மண்டல எஸ் சி எஸ் டி பிரிவு தலைவர் சின்னதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தீண்டாமை மற்றும் மது ஒழிப்பிற்கு எதிரான உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
0 coment rios: