S.K. சுரேஷ்பாபு.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா. மக்கள் சட்ட உதவி கழகத்தின் தலைவர் ஆர் வி பாபு மாலை அணிவித்து மரியாதை.
நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தியின் திருவருவ சிலைக்கு, மக்கள் சட்ட உதவி கழகத்தின் தலைவர் ஆர் வி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை எளியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவர் அரவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர கலந்து கொண்டனர்.
0 coment rios: