கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செல்பி பாயிண்ட் வைரலாகி வருகின்றது. குறிப்பாக சென்னை, கோவை நாமக்கல், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பிரம்மாண்டமான செல்பி பாயிண்ட்டுகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் காணப்பட்டாலும் இதுவரை ஈரோட்டுக்கு என்று ஒரு செல்பி பாயிண்ட் இல்லை என்ற குறை இருந்தது. இந்தக் குறையை போக்கும் வகையில் ஈரோடு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஈரோட்டுக்கு என்று செல்பி பாயிண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இதனையடுத்து, நம்ம ஈரோடை என்ற பெயர் கொண்ட செல்பி பாயிண்ட் திறப்பு விழா நடந்தது. இதில், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கலந்து கொண்டு செல்பி பாயிண்டை திறந்து வைத்து செல்பி எடுத்து கொண்டார்.
இவ்விழாவில், பாயிண்ட்டை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மனீஷ், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், மாநகராட்சி 1ம் மண்டல தலைவர் பழனிச்சாமி, திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர் புவனேஸ்வரி பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: