சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தீப ஒளி திருநாளை தூய்மை பணியாளர்களுடன் கொண்டாடி மகிழ்ந்து மாமன்ற உறுப்பினர்.
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தீபாவளி திருநாள் உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக இன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து புனித நீராடி புத்தாடைகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதன் ஒரு பகுதியாக இந்துக்களின் முக்கிய திருவிழாவான தீபாவளி திருநாளை சேலம் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான டைவலிங்கம் தனது கோட்டத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.
இதே போல சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள காக்காயன் மின் மயானத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு புத்தாடைகளையும் இனிப்புகளையும் வழங்கி தனது தீபாவளி வாழ்த்துக்களை தனது மனைவியுடன் மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞர் மான தெய்வலிங்கம் தெரிவித்து மகிழ்ந்தார்.
0 coment rios: