சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளசேலம் மாநகராட்சி பகுதிகளில் சேலம் மாநகராட்சி ஆணையாளருடன் சில மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஆய்வு.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 22 ஆவது கோட்டம் சிவதாபுரம் மற்றும் 23 வது கோட்டத்திற்கு உட்பட்ட வேடிக்கவுண்டர் காலனி, காமராஜர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தும், பாலத்தை மூழ்கடித்தும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங் அவர்களை வரவழைத்து சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து எடுத்துரைத்தும், இனிவரும் காலம் மழைக்காலமாக உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரப்படாமல் உள்ள ஓடைகள் மற்றும் சாக்கடைகளை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் சில மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்து நாயக்கன்பட்டி ஊராட்சி மற்றும் ஆத்துக்காடு பகுதிகளில் கான்கிரீட் சாலை வேண்டும் என்ற அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் கான்கிரீட் அமைக்கும் சாலை மற்றும் சுற்றுச்சூழல் கட்டும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து முத்துநாயக்கன்பட்டியில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் உள்ள சரபங்கா நதி பாலம் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் பாலம் மிகவும் பழுதடையுள்ளதால், பழைய பாலத்தை அதனை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் வலியுறுத்தினார். சேலம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் இந்த ஆய்வுப் பணியின் போது, பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில இணை செயலாளர் சத்திரிய சேகர், முத்துநாயக்கன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, சக்தி, 22-வது கோட்டை மாமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 coment rios: