சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஹஜ்ரத் மகபூப் சுபாஹானி உருஸ் மற்றும் மீலாது விழா ... 2500 கிலோ மட்டன் பிரியாணி தயாரித்து ஏழை எளியவர்களுக்கு தப்ரூக் வழங்கப்பட்டது.
ஹஜ்ரத் மகபூப் சுபாஹானி அவர்களின் உரூஸ் மற்றும் மீலா துவிழா இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் கடந்த 11 நாட்களாக தொடர்ந்து பிரசங்கமும், சிறப்பு தொழுகைகள் மேற்கொள்ளப்படும் ஹஜ்ரத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ஹஜ்ரத்திற்கான மரியாதை அனைத்தும் நிறைவடைந்த நிலையில் சேலம் கோட்டை மேல் தெரு சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் சேலம் கோட்டை இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் சார்பில், சேலம் ஜாமியா மசூதியின் முன்னாள் முத்தவல்லியும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான அமான் என்கின்ற நாசக்கான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நிர்வாகிகள், பண்டு, அஸ்மத், சானு, விநாயத், சாஜ் மான் கான், ரோகன், சைப்பூர் ரஹ்மான், தாஜுதீன், சேக் மதார், நூர், பாபு அனிஷ் அர்பாஸ்கான் அஜித் அலி முபாரக் அகமது ஜாவித் இர்ஃபான் இம்ரான் உஸ்மான் யாசின் மற்றும் தாஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், 2500 கிலோ மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு இன்று காலை ஏழு மணி முதல் ஆயிரக்கணக்கான அனைத்து சமுதாயத்தினருக்கும் தப்ரூப் வழங்கி சேலம் கோட்டை இஸ்லாமிய நற்பணி மன்றத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த விழா குறித்து சேலம் ஜாமியா பள்ளிவாசலின் முன்னாள் முத்தவல்லியும் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான அமான் என்கின்ற நாசர் கான் குறுகையில், கடந்த 65 வருடங்களாக ஹஜ்ரத் அவர்களின் மீலாது விழா சேலம் கோட்டை மேல் தெரு பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் 66வது ஆண்டான இன்று ஏழை எளியவர்களுக்கு 2500 கிலோ மட்டன் பிரியாணியும் அதனுடன் தால்ஜா மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பெருமைப்பட தெரிவித்தார். சுமார் 3,000 மேற்பட்ட அனைத்து சமுதாயத்தினரும் நீண்ட வரிசையில் காத்திருந்து இந்த தப்ரூக் எனும் பிரசாதத்தை பெற்று சென்றனர் என்றும் தெரிவித்தார்.
0 coment rios: