S.K. சுரேஷ்பாபு.
தூய்மை பணி மேற்கொள்ளும் அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரசஸ்ராம் ரவி வலியுறுத்தல்.
விசிக தொழிலாளர் விடுதலை முன்னணியிலன் மாநிலத் துணைச் செயலாளர் சரஸ்ராம் ரவி தமிழக அரசு மற்றும் சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி-அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் கவனதிற்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தூய்மை பணி செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் PF/ ESI வழங்கிட வேண்டும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கிட வேண்டும், அனைத்து ஒப்பந்த கூலி தொழிலாளர்களுக்கும் 4 செட் சீருடைகள்/ காலணிகள்/ குடை/ வாசிங் அலவன்ஸ் வருடம் தோறும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிற வேலை வாய்ப்பை போல் தூய்மை பணியில் இட ஒதுக்கீடு அமல்படுத்து. பட்டியலினம்- அருந்த்தியர்களை மட்டும் தூய்மை பணி செய்ய 100% அமுல்படுத்துவது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளதுடன், யாரும் பணி செய்ய முன் வராத தூய்மை பணி செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் ஊதியம் ரூ் 50,000 வழங்கிட வேண்டும், தொடர்ந்து பணியாற்றும் அனைத்து தூய்மை பணி தொழிலாளர்களுக்கும் கிராஜுடி ( GRATUITY ) வழங்கிட வேண்டும்,
தொழிலாளர் நல சட்டபடி ( 1942) அனைத்து தூய்மை ஒப்பந்த பணி செய்யும் தொழிலாளர்களுக்கு வருட விடுப்பு ( Leave ) / மருத்துவ வசதி ( Mediclaim ) / LTS / Pension வழங்கிட வேண்டும் என்றும் தமிழகம் முழவதும் அரசு மருத்துவமனைகளின் ஒப்பந்ததாரர் KRISTAL நிறுவன உரிமையாரை LLF தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர் ஆணையர் ( Labour Commissioner ) முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், தமிழகம் முழவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தூய்மை பணி செய்யும் தொழிலாளர்கள் சுமார் 30,000 தொழிலாளர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும், அவர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல்/ மருத்தும் படிப்பு படிக்க இலவச கட்டணம் அளித்திடு & தனி இட ஒதுக்கீடு கொடுத்திட வேண்டும் என்றும் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி வலியுறுத்தியுள்ளார்.
0 coment rios: