சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் கொங்கணாபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள அரசு கல்வி இயல் கல்லூரியை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு.
பாட்டாளி மக்கள் கட்சி மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர் விஜய ராஜா தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை வழங்கினர். அந்த மனதில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராமல் சேதமடைந்து வரும் அரசு கல்வியியல் கல்லூரியை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உறுப்புக்கல்லூறியான அரசு கல்வியின் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதற்கான கட்டமைப்பு வசதிகள் முழு அளவில் இருந்த போதும் கடந்த 2019 இல் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்கு வராமல் போட்டி கிடப்பதால் இப்பகுதியை சார்ந்த பட்டதாரி மாணவர்கள் இளங்கலை கல்வியியல் பட்டம் மேற்படிப்பிற்காக அருகே உள்ள ஈரோடு நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தியும் நீண்ட தூரம் பயணம் செய்தும் கல்வி பயில்கின்ற அவல நிலையில் உள்ளனர். எனவே மேற்கொண்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த கல்லூரியை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
0 coment rios: