சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா. கோவில்களில் சிறப்பு பூஜை மேற்கொண்டும், இலவச மருத்துவ முகாம் நடத்தியும் பாமகவினர் உற்சாகம்.
பாமக தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை பாமகவினர் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். அக்டோபர் ஒன்பதாம் தேதி டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடிவரும் நிலையில் சேலம் பாமக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளர் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான இரா. அருள் தலைமையில், சேலம்ராஜகணபதி திருக்கோவில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, தொடர்ந்து, சேலம் சுகவனேஸ்வரர் அருகிலுள்ள தியா சாபீகள்சொசைட்டி முன்பாக 500 ஏழைகளை அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டன. தொடர்ந்து சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலணியில் அம்மணி அம்மாள் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றன.
பின்னர் சேலம் வென்னங்குடி முனியப்பன் கோவில் சிறப்பு பூஜைகளும் அதனை தொடர்ந்து மித்தா புதூரில் உள்ள அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டன, தொடர்ந்து அன்று மாலை சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழாவையொட்டி தங்க தேரிகளுக்கும் வைபவமும் நடத்தி சேலத்தில் பாமகவினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சிகளில், கதிர் ராஜரத்தினம் மாவட்ட தலைவர், பசுமைத் தாயகம் சத்ரிய சேகர், எம்பி சதாசிவம், வக்கீல் குமார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜமாணிக்கம் பூபதி கலையரசன் சங்கர், பகுதி செயலாளர்கள் அண்ணாமலை, திரிசங்கு,சோடா சண்முகம், சின்னசாமி, சிவக்குமார்,அங்கம்மா காலனி சுரேஷ், வக்கீல் ரஞ்சித்,அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: