சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா. முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கி பாமக மாணவர் சங்கத்தினர் உற்சாகம்.
பாமக தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை பாமகவினர் இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். அக்டோபர் 9ம் தேதியான இன்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடிவரும் நிலையில், பாமக மாணவர் அணி சார்பில் சேலத்தை அடுத்துள்ள உடையாபட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ வாசவி சேவா டிரஸ்ட், ஸ்ரீ வாசவி முதியோர் இடத்தில் உள்ளவர்களுக்கு இன்று காலை பாமக மாணவர் சங்க மாநில செயலாளர் வழக்கறிஞர் விஜய ராசா தலைமையில் நிர்வாகிகள் வழங்கி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாள் விழாவை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர். பாமக மாணவர் சங்கத்தினரின் இந்த செயல்பாட்டிற்கு டிரஸ்ட் நிர்வாகிகள் சார்பில் பாராட்டுகள் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாமக மாணவர் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: