ஈரோட்டில், தமிழக பண்பாட்டு கண்காட்சியினை, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரன் மாணவர்கள் அமைப்பு இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியின் துவக்க விழாவில் ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னணி வகித்தனர்.
தமிழர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு வகையான பொருள்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன.
இவற்றை அமைச்சர் முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
குறிப்பாக, குடும்பமேளம், பெரிய மேளம் உருமி மேளம், உள்ளிட்ட 20 வகையான மேளங்கள் இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்தன.
சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 80 வகையான தமிழிசை கருவிகளை அங்கிருந்து பொதுமக்களும் ,மாணவ மாணவிகளும் கண்டு வியந்தனர்.
முன்னதாக அமைச்சர் முத்துசாமி கண்காட்சியினை துவக்க வைத்த போது தமிழ் பாரம்பரிய முறைப்படி தமிழிசை கருவிகள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகையும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.
0 coment rios: