இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வணிக வாடகை கட்டங்களுக்கு வாடகைக்கு 18 சதவீதம் வரி விதிப்பு, தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து நவ.29ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒருநாள் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப் படும் என்றும், தொழில் நிறுவனங்களில் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு ஜவுளிக்கடை உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் உள்பட பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதேபோல், ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பிலும், நவ.29ம் தேதி கடையடைப்பு நடைபெறுகிறது. ஈரோடு பகுதியில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட கடைகள், குடோன்கள் கடையடைப்பில் பங்கேற்க உள்ளன. இதில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கம், ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம், இப்போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
0 coment rios: