சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் கூட்டுறவு துறையின் செயல்பாடு ஒரு லட்சம் கோடி என்பதை விரைவில் எட்டும் என்று கூட்டுறவு வார விழாவின் மாநில அளவிலான விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் உறுதி. தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் பணியிடங்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் உறுதி
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வார விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில் வார விழாவின் இறுதி நிகழ்ச்சியாக மாநில அளவிலான கூட்டுறவு வார விழா சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வார விழாவையொட்டி அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டனர். தொடர்ந்து கூட்டுறவு துறையின் பல் நோக்கு திட்டத்தின் கீழ் சுமார் 3.34 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும் சுமார் 6,600 பயனாளிகளுக்கு 55.71 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், கூட்டுறவுத் துறையின் மூலமாக பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாகவும் இந்த துறையின் மூலம் கடந்த ஆண்டு 86,000 கோடி ரூபாய் வரவு செலவு செய்துள்ளதாகவும் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி கூட்டுறவு சங்கங்களின் செயல்பாட்டினை ஒரு லட்சம் கோடியாக மாற்றிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருமையோடு பேசிய அமைச்சர், தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் காலியாக உள்ள சுமார் 3300 பணியிடங்களை நிரப்பிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் நடைபெற உள்ளதாகவும் பேசினார். கூட்டுவத்துறையின் மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் பயன் பெற்று வருவதாகவும் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் விரைவில் ஆயிரம் மருந்தகங்கள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கூட்டுறவு துறையில் அனைவரும் உறுப்பினராக வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
முன்னதாக விழாவில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசியல் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அதிலும் கூட்டுறவுத்துறை என்பது மக்களின் நலனுக்காக செயல்படக்கூடிய துறை என்றும் இந்த துறையின் மூலம் சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நெசவாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் மகளிர் என அனைத்து தரப்பினரும் பயன்பெற்றுள்ளதாகவும் பெருமையோடு பேசினார்.
விழாவில் கூட்டுறவுத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி எம் செல்வகணபதி, மலையரசன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: