சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் திறக்கப்பட்ட அதிநவீன உடற்பயிற்சி மையத்தில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் உடற்பயிற்சி மேற்கொண்டு மகிழ்ச்சி..
சேலம் டவுன் ரயில் நிலையம் அருகே அதிநவீன முறையில் ஆகில்ஸ் பிட்னெஸ் என்கின்ற யுனி செக்ஸ் பயிற்சி மையம் திறப்பு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடனும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துக்களுடனும் துவக்கப்பட்ட இந்த புதிய அதி நவீன உடற்பயிற்சி மையத்தில் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் கலந்து கொண்டு திறந்து வைப்பதாக இருந்தது.
அன்று வராத காரணத்தின் காரணமாக இன்று அதிநவீன உடற்பயிற்சி மையத்தினை பார்வையிட்டார் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன். இந்த நிகழ்ச்சிக்கு பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபு தலைமை தாங்கினார்.
பயிற்சி பார்வையிட்டு அங்கு வைக்கப்பட்டுள்ள அதிநவீன பயிற்சி கருவிகள் குறித்து அதன் உரிமையாளரிடம் கேட்டறிந்தார். பின்னர் விழாவில் கலந்து கொண்ட தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருக்கு உடற்பயிற்சி மைய உரிமையாளர் நினைவு பரிசுகளை வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தார். பின்னர் உடற்பயிற்சி மையம் நன்கு வளர்ச்சி பெற தனது வாழ்த்துக்களை பதிவு செய்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர்.
சேலம் மாநகரில் எத்தனையோ உடற்பயிற்சி நிலையங்கள் இறந்தபோதிலும், தற்பொழுது சேலத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆகில்ஸ் ஃபிட்னெஸ் யூனி செக்ஸ் பயிற்சி மையத்தில், வழக்கமான உடற்பயிற்சிகளுடன், கூடுதலாககொழுப்பு குறைப்பு, கார்டியோ பயிற்சி, எடை பயிற்சி, தசை பயிற்சி, தனிப்பட்ட பயிற்சி, உணவு திட்டமிடல் ஆகிய பயிற்சிகளும், இது போக காயம் மீட்பு, தரமான உபகரணங்கள், சிறந்த பயிற்சி, விளையாட்டு சார்ந்த பயிற்சி, அதிகரித்த உடற்பயிற்சி மற்றும் ஆற்றல் நிலைகள், பாடி பில்டர் & பவர் லிஃப்டிங் பயிற்சி ஆகியவை வழங்கப்பட உள்ளதாக பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபு தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் அதிகப்படியாக தங்களது உடலை வருத்தி உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் சூழல் தற்பொழுது எழுந்துள்ள நிலையில், இது போன்ற நிகழ்வு நிகழாமல் இருக்க கூடுதல் பயிற்சியாளர்களை வைத்து உன்னிப்பாக கவனம் செலுத்த உள்ளதாகவும், பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபு தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி நிலையம் மேற்கொள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சி மையத் துவக்க விழாவில் 31வது வார்டு திமுக செயலாளர் சையது இப்ராஹிம், 32வது வார்டு செயலாளர் கபிர், திமுக நிர்வாகி ஓதூர்ரஹ்மான், கரீம், முகமது ஹாஜிம், காங்கிரஸ் நிர்வாகிகள் குமரேசன் மற்றும் யூசுப் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: