திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வலுவாக உள்ளதால் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: ஜவாஹிருல்லா பேட்டி
ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றும் விழாவில்
அக்கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மத்திய அரசின் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கண்டித்து வருகின்ற டிசம்பர் 6ம் தேதி தமிழகத்தில் 10 பெருநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
வக்பு வாரிய சொத்துக்கள் இருக்க கூடாது என்ற நோக்கத்தில் வக்பு வாரிய திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் அடுத்த மாதம் பெங்களூரில் அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் கூட்டம் நடைபெற இருப்பதால் அந்த கூட்டத்தில் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறினார்.
திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது என்ற ஜவாஹிருல்லா 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வலுவாக உள்ளதால் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது என்றார்.
அமரன் திரைப்படம் ராணுவத்தில் பணியாற்றி மேஜர் வாழ்க்கை சித்திரிக்கும் வகையில் அமைந்துள்ளது,மேஜர் முகுந்தன் வரதாஜன் உட்பட பல ராணுவ வீரர்கள் பல தியாகங்களை செய்து இருக்கிறார்கள் ஆனால் அமரன் திரைப்படம் காஷ்மீர் மக்களின் உண்மையான துயரத்தை எடுத்துரைக்க தவறிவிட்டது.,ஒரு நுட்பமான முறையில் பாஜக அரசியல் கருத்துக்கள் எடுத்துரைக்கும் வகையில் எடுத்து கூறப்பட்டுள்ளதால் அமரன் திரைப்படத்தினை எதிர்க்கிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமுமுக மமக மாவட்ட தலைவர் சித்தீக், மாவட்ட பொறுப்பாளரும் மாநில தலைமை பிரதிநிதி சுல்தான் அமீர், மாநில தலைமை பிரதிநிதிகள் முகமது ரிஸ்வான், கோவை அக்பர்அலி, மாநில தொண்டர் அணி செயலாளர் பவானி முகம்மது, மமக மாவட்ட செயலாளர் சலீம், தமுமுக மாவட்ட செயலாளர் முகம்மது லரிப், மாவட்ட பொருளாளர் சகுபர் அலி,
மாநில மமக செயற்குழு உறுப்பினர்கள் ஆட்டோ சாகுல் அமீர், அமீர்
மாநில மருத்துவ சேவை அணி துணைச் செயலாளர் பௌஜூல் ஹசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் இலியாஸ், மாவட்ட துணை தலைவர் சுல்தான் அலாவுதீன், மமக மாவட்ட துணைச் செயலாளர்கள் பெருந்துறை பாபு சாகுல் ஹமீது, தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள்
சாகுல் ஹமீது, இஸ்மாயில்
மாட்ட மருத்துவ அணி செயலாளர் சிக்கந்தர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜீலானி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்
சையது முஸ்தபா
ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: