வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சேலத்தில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சேலம் கோட்டை மைதானத்தில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சேலம் மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாநில தணிக்கை குழு உறுப்பினர் நெல்லை சையது அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வக்பு வாரிய திருத்த சட்டம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு தர்மமாக வழங்கப்பட்டு நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் வக்பு வாரியத்திற்கான அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்குவது என்பது சங் பரிவார் அமைப்பின் முஸ்லிம் வெறுப்பு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக முன்னோர்கள் வழங்கிய லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாஜக அரசின் கண்களை உருக்குகிறது என்று வலியுறுத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவற்றை அபகரித்து அதானி அம்பானி உள்ளிட்டவர்களுக்கு வழங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் பாஜக சரி செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில தணிக்கை குழு உறுப்பினர் நெல்லை சையத் அலி கூறுகையில் இந்த மசோதாவானது வக்பு வாரியத்தின் வருமானத்தை குறைத்து அதை மேலும் பலவீனப்படுத்தும் ஆக்கிரமிப்பாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதற்கான வழிவகைகளை செய்யும் நடைமுறை என்று குற்றம் சாட்டிய அவர் சர்ச்சைக்குரிய நிலங்களுக்கு தீர்வு காணும் அதிகாரம் கலெக்டர் உள்ளிட்ட வருவாய் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அதன் மூலம் வக்பு வாரிய தீர்ப்பாயத்தை நீர்த்துப்போக செய்யும் எனவே மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நாடு தழுவிய அளவில் இந்தியாவை நேசிக்கும் முன் மதத்தினரையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாத் அத் அமைப்பை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: