சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஒன்பதாவது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாமினை மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் நேரில் பார்வை இட்டு ஆய்வு...
இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக நவம்பர் மாதம் 16 17 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இந்த முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு பெயர் மாற்றம் இடம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தீர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு அறிவித்து இருந்தது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர்கள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாநகராட்சியின் 9 ஆவது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர்களுக்கான சிறப்பு சிறப்பு முகாமில் ஏராளமான வாக்காளர்கள் கலந்து கொண்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள குளறுபடைகளை சரி செய்து கொண்டிருந்த சிறப்பு முகாமில் சேலம் மாநகராட்சியின் ஒன்பதாவது கோட்ட உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
0 coment rios: