S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஏற்காட்டுக்கு ரோப் கார் ஏற்படுத்த திட்டம் மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு,
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மாநில கொண்டலாம்பட்டி தங்கராஜ் நன்றி.
கடந்த 22 .10. 2024 தேதியில் நாமக்கல் மாவட்டத்திற்கு நலத்திட்டங்கள் வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சேலம் வழியாக நாமக்கல் சென்ற போது கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் ஐயா அவர்களுக்கு வரவேற்பு கொடுத்து16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டது கோரிக்கையில் சேலம் ஏற்காட்டிற்கு ரோப் கார் வசதி செய்து தர வேண்டி கோரிக்கை கொடுக்கப்பட்டது.
விவசாயிகளின்கோரிக்கை கொடுத்த அடிப்படையில் ஏற்காட்டிற்கு ரோப் கார் வசதி ஏற்படுத்த 16 .11.2014 தினத்தந்தி செய்தித்தாளில் இன்று ஏற்காட்டுக்கு ரோப் கார் ஏற்படுத்த திட்டம் மதிப்பீடு தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றன செய்தி அறிக்கை வெளியாகி உள்ளதற்கு எங்களுடைய கோரிக்கையை மனதார ஏற்றுக்கொண்டு உடனடியாக திட்ட மதிப்பீடு செய்ய உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் சேலம் மாவட்டம் மாண்புமிகு சுற்றுலாதுறை அமைச்சர் ஐயா அவர்களுக்கும் மனதாரவாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மாநில தலைவரும் திருமணிமுத்தாற்று பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கொண்டலாம்பட்டி திரு.எம் தங்கராஜ் அவர்கள் பதிவு தபால் முதலமைச்சர் அவர்களுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு சங்க நிர்வாகிகள்.
0 coment rios: