ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் பிரபா. அரசு பள்ளி ஆசிரியையான இவர் ஈரோடு மாநகராட்சி தொடக்கபள்ளி தலைமை ஆசிரியரான முத்துராமசாமியிடம் தனது வீட்டை அடமானமாக வைத்து 15 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார், அசலையும் வட்டியையும் திருப்பி செலுத்திய நிலையில் வீட்டு ஆவணங்களை திருப்பி தர மறுப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் முத்துராமசாமி மீது பிரபா புகார் அளித்தார்.
இந்த புகாரில் நடவடிக்கை எடுக்காத, கோபிசெட்டிபாளையம் போலீசார் முத்துராமசாமி கொடுத்த பொய் புகாரில் பிரபா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததாக பிரபா குற்றம் சாட்டுகிறார்.
இந்தநிலையில் கடந்த 16ம் தேதி தனது ஆட்களுடன் பிரபா வீட்டிற்கு சென்ற முத்துராமசாமி, வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி யுள்ளார். மேலும் வீட்டில் இருநத பிரபாவின் தாயார் மற்றும் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.(இது தொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளன)
தனது வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பாக பிரபா கொடுத்து புகாரின் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் போலீசார் முத்துராமசாமி மீது எஸ்சி எஸ்டி பிரிவு உட்பட 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதனிடையே தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த முத்துராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஆசிரியை இன்று புகார் அளித்தார்.
மாணவர்களுக்கு கல்வி கற்பித்து நல்வழிப்படுத்தும் தலைமை ஆசிரியர் ஒருவரே சக பெண் ஆசிரியையின் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து கொலைமிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
0 coment rios: