சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஸ்ரீ ராஜ கணபதி திருக்கோயில் மண்டபம் சுபமுகூர்த்தகால் விழா. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் ராஜகணபதி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
சேலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் வசந்த மண்டபம் கட்டுவதற்கான சுபமுகூர்த்தகால் நடும் விழா திருக்கோயில் வளாகத்தில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவலர்கள் குழுத்தலைவர் சோனா வள்ளியப்பா, அறங்காவலர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். முன்னதாக காலை 7.30 மணி முதல் சிறப்பு ஸ்ரீ ராஜகணபதிக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. தொடர்ந்து திருக்கோயில் வசந்த் மண்டபம் கட்டுவதற்கான சுபமுகூர்த்தகால் விழா நடைப்பெற்றது. பின்னர் அனைத்து பக்கதர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த பணியானது சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா தனது சொந்த செலவில் ரூபாய் 24.75 லட்சம் மதிப்பிட்டில் அரசு அனுமதி பெற்று திருப்பணிகள் துவக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேசிய அறங்காவலர்கள் குழுத்தலைவர் சோனா வள்ளியப்பா ஸ்ரீ ராஜ கணபதி திருக்கோயில் மண்டபம் சுபமுகூர்த்தகால் விழா சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்க முழுமுயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள், சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் ஆகியோர்களுக்கு கலந்து கொண்டார்.
0 coment rios: