சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சென்னை குருநானக் கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு நீதி கிடைக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி தமிழக அரசுக்கு கோரிக்கை.
சென்னை குருநானக் கல்லூரியில் படித்து வரும் மாணவி லோகேஸ்வரி
அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்திற்கு மாறாக அதிக கட்டணம் செலுத்த முடியாது என்று கூறியதற்காக, மாணவி லோகேஸ்வரிக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்காமல் பழிவாங்கும் நோக்கில் செயல்படும் குருநானக் கல்லூரி நிர்வாகத்தால் மனம் உடைந்து விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 29.10.2024 முதல் மூன்று நாட்களாக, சென்னை கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவி லோகேஸ்வரியை ஏப்ரல் 14 இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் மரியாதைக்குரிய திரு. சசிக்குமார் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார் இந்நிகழ்வில் ஏப்ரல் 14 இயக்க மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.