சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். சேலத்தில் நீதிமன்ற பணிகள் பாதிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் வழக்கறிஞர் கண்ணனை அறிவாளால் வேட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்ணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் இரண்டு நாட்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் கொடூரமாக தாக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அரசை வலியுறுத்தும் விதமாக இன்று பணிபுறகணிப்பில் ஈடுபட்டுள்ள சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் நாளை காலை தாக்குதல் நடத்திய நபர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் குற்றப்பத்திரிகை உடனடியாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் வரும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் இமயவரம்பன் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற பணிகளும் பல்வேறு வடக்குக்காக வந்திருந்த வழக்காடிகளும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
0 coment rios: