சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. கல்வியின் பெருமை குறித்து புகழாரம் சூட்டிய சுற்றுலாத்துறை அமைச்சர் உட்பட சிறப்பு விருந்தினர்கள்......
தமிழக அரசின் எத்தனையோ நல்ல பல திட்டங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் விடையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தின் பயனாக லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் பயன் பெற்று வருகின்றனர் என்பது மறுக்க முடியாத ஒன்று.
அந்த வகையில் தமிழக அரசின் இலவச விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சேலம் சாரதா கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியை சேர்ந்த +1 பயிலும் மாணவர்கள் 960 பேருக்கு வழங்கும் விழாவிற்கு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி தலைமை வகித்தார். விழாவில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி, சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள், சேலம் அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்த இந்த விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் பேருரை ஆற்றினார்.
அப்பொழுது பேசிய அவர், கல்வி ஒன்றே ஒவ்வொருவரையும் இந்த சமுதாயத்தில் முன்னிலைப்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து எத்தனையோ மாவட்ட ஆட்சியர்கள் சேலம் மாவட்டத்திற்கு வந்து சென்று இருந்தாலுமே கூட இரண்டாவது சேலம் மாவட்ட பெண் ஆட்சியர் என்ற பெருமையை டாக்டர் பிருந்தா தேவி அவர்கள் பெற்றுள்ளார் என்றும் இதேபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள முக்கிய அதிகாரிகளில் பெண்களுக்கு மட்டுமே அந்த பதவிகளை அலங்கரித்து வருவதாக குறிப்பிட்டவர் இதற்கு காரணம் கல்வி மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு மாணவர்களுக்கும் கல்வி எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்பதற்காக மட்டுமே தாய் உள்ளத்தோடு தமிழக முதல்வர் அவர்கள் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கி நாள் ஒன்றுக்கு தமிழக முழுவதும் 40 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி வருவதாக பெருமையுடன் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு என்று செயல்படுத்து வரும் திட்டங்கள் ஒவ்வொன்றையும் கனடா நாட்டு அதிபர் தொடர்ந்து கண்காணித்து தமிழகத்தில் நிறைவேற்ற வரும் திட்டங்கள் அனைத்தையும் அங்கு நிறைவேற்றி வருவது பெருமை கூறியது என்றும், இது மட்டும் அல்லாமல் ஒன்றாம் வகுப்பு முதல் உயர் கல்வி பயின்று வரும் ஏழை எளிய மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் மூலமாக ஏராளமான திட்டங்களை வகுத்துள்ள தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்தி தமிழக மாணாக்கர்கள் ஒவ்வொருவரும் கல்வியில் முன்னேறி பெற்றவர்களுக்கும் தமிழகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 960 மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் இலவச விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியின் நிர்வாக அதிகாரிகள் உட்பட பள்ளியில் தலைமை ஆசிரியை மாணாக்கர்கள் அரசுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: