சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் சேலத்தில் நடைபெற உள்ள மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு இந்திய மூலநிவாசி காவல் படை ஆகிய அமைப்புகளின் சார்பில் வரும் டிசம்பர் 29-ம் தேதி சேலத்தில் பட்டியல், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை மீட்பு மற்றும் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்தான ஆலோசனைக் கூட்டம் சேலம் சின்ன திருப்பதியில் உள்ள தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி மற்றும் தமிழ்நாடு இந்திய மூலநிவாசி காவல் படை அமைப்பின் நிர்வாகி தமிழமுதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த கூட்டத்தில், அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சேலத்தில் வரும் டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ள உரிமை மீட்பு மற்றும் பாதுகாப்பு மாநாட்டில், தமிழ்நாடு மாநில அரசு துறைகளில் 100% இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், மத்திய மாநில அரசு துறைகளில் உள்ள 2 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பொதுத்துறைகளான இன்சூரன்ஸ், ரயில்வே, செயில், வங்கி, மின்வாரியம் மற்றும் அரசு போக்குவரத்து துறை ஆகியவற்றை தனியார் மையம் ஆக்கக்கூடாது, இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல தங்களது உரிமை மற்றும் புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றுவது என இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் நாமக்கல் தர்மபுரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் MS பாபு
தமிழமுதன், முரளி, ராம்ஜி, சம்பத், செல்வகுமார், ரீஜேந்தெரன் கலந்து கொண்டனர்.
0 coment rios: