இவர்கள் நடத்திய வாரச் சீட்டு திட்டத்தில் சாமிநாதபுரம், சமத்துவபுரம்,வாய்க்கால் ரோடு, பஜனைகோயில் வீதி, கல்ராமணி, மல்லி பாளையம், அளுக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். வாரம் 100 ரூபாய் செலுத்துபவர்களுக்கு 52 வார முடிவில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு 6 ஆயிரம் ரூபாய் பணமும், அரை கிலோ இனிப்பு மற்றும் அரை கிலோ காரமும் வழங்குவதாக கூறியுள்ளனர்.
இதை நம்பிய சுமார் 400க்கும் மேற்பட்டோர் வாரம் தோறும் 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை சீட்டு தொகையாக செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே முதிர்வு தொகை வழங்குவதாக கூறிய இருவரும் உறுதியளித்தவாறு முதிர்வு தொகையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இவ்வாறாக அவர்கள் பணம் வசூலித்து ரூ.15 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக தெரிகிறது. இதனால் பணம் செலுத்தியவர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் பழனிசாமி மற்றும் கமலக்கண்ணனை தேடிய போது இருவரும் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 50 பேர் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
0 coment rios: