ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து மாணவர்கள் வீடு திரும்புவதற்காக கல்லூரி வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, செங்கோடம்பாளையம் என்ற பகுதியில் உள்ள சாலையில் கல்லூரி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், வாகனம் நிலை தடுமாறிய அருகே இருந்த மரத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கல்லூரி வாகனத்தில் பயணித்த 15 மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காயங்கள் ஏற்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் கல்லூரி வாகன ஓட்டுநரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
கல்லூரி வாகன ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 coment rios: